கரோனா 3-வது அலை வராமல் தடுப்பது மக்கள் கையில் தான் உள்ளது : கரூர் ஆட்சியர் த.பிரபுசங்கர் அறிவுரை

By செய்திப்பிரிவு

கரோனா 3-வது அலை வராமல் தடுப்பதும், தள்ளிப்போடுவதும் மக்கள் கையில் தான் உள்ளது என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.

கரூர் மாவட்ட வியாபாரிகள், வர்த்தகர்கள், காய்கறி விற்பனையாளர்கள், உணவு விடுதி உரிமையாளர்கள் சார்பாக, கரூர் கோவை சாலையில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பின்னர், ஆட்சியர் பிரபுசங்கர் பேசியது: கரோனா 3-வது அலை வராமல் தடுக்க, வணிகர்கள் தங்களது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்வதுடன், அவர்களுக்கு கிருமி நாசினி கொடுத்து கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்த வேண்டும். நிறுவனங்கள் தங்களின் பணியாளர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்யவேண்டும்.

கரோனா 3-வது அலையை தடுப்பதும், தள்ளிப்போடுவதும் மக்கள் கையில் தான் உள்ளது. கரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பெயரளவிலும், உதட்டளவிலும் இல்லாமல் உண்மையான சமுதாய அக்கரையோடு அனைவரும் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

முன்னதாக, அங்குள்ள ஒரு தனியார்பல்பொருள் அங்காடியில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக வாடிக்கையாளர்களுக்கு கிருமி நாசினி வழங்குவதையும், விழிப்புணர்வு சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளதையும், பொருட்களுக்கு வழங்கப்படும் ரசீதில் கரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளதா? என்பதையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்