வேலூர் அடுத்த புரம் சக்தி அம்மாவின் பூர்வாஸ்ரம தந்தை நந்தகோபாலின் மறைவுக்கு பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு சாகர் தோட்டத்தில் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது.
வேலூரின் அடையாளமாக உள்ள புரம் பொற்கோயிலை நிறுவிய சக்தி அம்மாவின் பூர்வாஸ்ரம தந்தை நந்தகோபால். அரியூர் கூட்டுறவு நூற்பாலையில் பணிபுரிந்தவர். ஆசிரியையாக பணிபுரிந்த ஜோதியம்மாள் என்பவரை மணந்தார். இவர்களுக்கு மூத்த மகனாக நாராயணி மருத்துவமனை இயக்குநர் என்.பாலாஜி யும், இளைய மகனாக சக்தி அம்மா ஆகியோர் ஆவார்கள். அனைவ ராலும் நேசிக்கப்பட்ட நந்தகோபால் நேற்று முன்தினம் பிற்பகல் நாராயணி திருவடிகளில் ஐக்கியமானார். நாராயணி மஹால் நிவாஸ் இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதையடுத்து, புரம் நாராயணி ஆயுர்வேதிக் மையம் அருகில் உள்ள சாகர் தோட்டத்தில் நேற்று இறுதி சடங்கு நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago