திருப்பூரில் லாரி டிரான்ஸ்போர்ட் சுமைப் பணி தொழிலாளர்களுக்கு புதிய சம்பள ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றுமாறு, சிஐடியு சுமைப் பணி தொழிலாளர் சங்க சிறப்பு பேரவை வலியுறுத்தியுள்ளது.
சிஐடியு லாரி டிரான்ஸ்போர்ட் சுமைப் பணி தொழிலாளர்கள் சிறப்பு பேரவைக் கூட்டம், திருப்பூரில் நடைபெற்றது. சிஐடியு சுமைப் பணி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எம்.ராஜகோபால் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கே.உன்னிகிருஷ்ணன், சங்க நிர்வாகி கே.பி.ஜி.ராமசாமி உட்பட சுமைப் பணி தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர்.
லாரி டிரான்ஸ்போர்ட் சுமைப் பணி தொழிலாளர்களுக்கு முந்தைய சம்பள ஒப்பந்தம் முடிவடைந்து ஓராண்டுக்கு மேலாகிறது. கரோனா பரவலைக் காரணம்காட்டி புதிய சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை நடத்தாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதார நெருக்கடிகளை சந்தித்துவரும் சுமைப் பணி தொழிலாளர்களுக்கு, புதிய சம்பள உயர்வு வழங்குவதற்கு உரிமையாளர் சங்கத்தினர் முன்வர வேண்டும். சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து உடனடியாக சுமைப் பணி தொழிலாளர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்.
தொழிலாளர் நலச் சட்டங்களை பணியிடங்களில் அமலாக்க வேண்டும். சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) விதிமுறைப்படி, அதிகபட்சம் 55 கிலோ எடை உள்ள சுமைகளை மட்டுமே தொழிலாளர்கள் தூக்குவதை உரிமையாளர்கள் சங்கத்தினர் உறுதிப்படுத்த வேண்டும். கூடுதல் சுமைகளை தூக்குவதற்கு கட்டாயப்படுத்தக்கூடாது.
சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி, வரும் 9-ம் தேதி முதல் திருப்பூர் ராம் நகர் லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சங்க அலுவலகம் அருகில் சிஐடியு சுமைப் பணி தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனறு முடிவு செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago