திருவள்ளூரில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் அமைச்சர் பங்கேற்பு :

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல், கரோனா விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று திருவள்ளூரில் பல்வேறு கரோனா விழிப்புணர்வு நிகழ்வுகள் நடந்தன. இதில், பால்வளத் துறைஅமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் பஸ்நிலையத்தில், பஸ்களில் பயணம்செய்யும் பயணிகள், கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள், முகக்கவசங்களை வழங்கினார்.

பிறகு, திருவள்ளூர் ஜே.என்.சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் அமைச்சர் தலைமையில், கரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, அங்கு நடந்த கை கழுவும் செயல்முறையை அமைச்சர் பார்வையிட்டு, செயல்முறையை செய்து காட்டினார்.

இந்நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சுகாதாரப் பணிகளுக்கான துணைஇயக்குநர் ஜவஹர்லால், திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அரசி வத்சன், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம் மற்றும் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கரோனா விழிப்புணர்வு நிகழ்வுகள் நடந்தன.

திருப்போரூர் கந்தசுவாமி கோயில் வளாகத்தில் கைகளை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்போரூர் பேருந்து நிலையத்தில், பேரூராட்சியின் துப்புரவு மேற்பார்வையாளர் ரவிசந்திரன் தலைமையில், கரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்