பரங்கிப்பேட்டையில் நீர் விளையாட்டு வளாகம்அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
புவனகிரி வட்டத்துக்கு உட்பட்டது பரங்கிப்பேட்டை பேரூராட்சி. இந்த ஊர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முக்கிய துறைமுகமாக விளங்கியுள்ளது. ஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலையும் இங்கு நிறுவப்பட்டது. பாபா கோயிலும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தினால் நிறுவப்பட்ட கடல் வாழ் உயராய்வு மையம் இங்கு உள்ளது. இதிலுள்ள கடல்சார் அருங்காட்சியகம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் மீன்பிடி இறங்குதளத்தில் படகில் கொண்டு வரப்படும் மீன்கள் அன்டைமாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்படி பெருமை வாய்ந்த பரங்கிப் பேட்டையில் பேரூராட்சி சார்பில் ரூ. 60 லட்சம் மதிப்பில் பரங்கிப்பேட்டை நீர் விளையாட்டு வளாகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் கடந்த 2 வருடத்துக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது 80 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளது. மீதமுள்ள 20 சதவீத பணிகள் இன்னும் 1 மாதத்தில் முடிவு பெறும் என கூறப்படுகிறது. இந்த நீர் விளையாட்டு வளாகத்தில் படகு குழாம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து பரங்கிப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் கூறுகையில், "பரங்கிப்பேட்டையில் நீர் விளையாட்டு வளாகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.உள்ளூர், வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலசுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வளாகம் செயல்பாட் டுக்கு வந்தால் இப்பகுதி மேம்படும்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago