தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் வீ.ராமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 2, 3) ஆய்வு மேற்கொள்கிறது.
கல்வி உரிமைச் சட்டம் பின்பற்றப் படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் அதிகாரம், மாநில குழந்தை உரிமைகள் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. பழநி அருகே கணக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளி, பழநி நகராட்சி மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி உரிமைச் சட்டம் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என ஆய்வு நடத்தப்படும்.
மேலும் கணக்கன்பட்டியில் ஆலோச னைக்கூட்டம் நடைபெறும். தொடர்ந்து ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் வட்டங்களில் உள்ள அரசின் உரிமம் பெற்று செயல்படும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் ஆய்வு நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago