புதுக்கோட்டையில் 2 நாட்கள் நடைபெற்ற தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு நேற்று நிறைவடைந்தது.
மாநாட்டுக்கு, மாவட்ட துணைத் தலைவர் பி.சந்திரா தலைமை வகித்தார். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் மாநாட்டை தொடங்கி வைத்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கோ.பச்சையம்மாள், பொருளாளர் கே.மல்லிகா ஆகியோர் அறிக்கை வாசித்தனர்.
இதில், மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல்- காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், எம்எல்ஏக்கள் எம்.சின்னத்துரை (கந்தர்வகோட்டை), வை.முத்துராஜா (புதுக்கோட்டை), சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.தர், அங்கன்வாடி சங்க மாநில பொதுச் செயலாளர் டி.டெய்சி, பொருளாளர் எஸ்.தேவமணி ஆகியோர் பேசினர்.
இதில், அமைச்சர்கள் பேசும்போது, ‘‘அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கி, காலமுறை ஊதியம் வழங்குவது குறித்து தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago