மாவட்ட நூலகச் சுவரில் விழிப்புணர்வு ஓவியங்கள் :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்சியர் விஷ்ணு அறிவுறுத்தலின் பேரில் கரோனா விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்ட மைய நூலகச் சுவரில் சிவராம் கலைக்கூட பள்ளியின் மாணவ, மாணவிகள் 25 பேர் கரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்தனர். மைய நூலக வாசலில் பிரம்மாண்டமான கரோனா விழிப்புணர்வு பதாகை நிறுவப்பட்டது.

மேலும், கரோனா விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் நூலக வாசகர்கள் விநியோகம் செய்தனர். மாவட்ட மைய நூலகப் பணியாளர்கள், வாசகர்கள், போட்டித் தேர்வு மாணவர்கள் கரோனா விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்வில் துணை ஆட்சியர் (பயிற்சி) மகாலட்சுமி, மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி, கிராம உதயம் நிர்வாக இயக்குநர் பகத்சிங், பாளையங்கோட்டை வட்டாட்சியர் ஆவுடையப்பன் ஆகியோர் விழிப்புணர்வு உரையாற்றினர்.

வாசகர் வட்ட துணைத் தலைவர் கோ.கணபதிசுப்பிரமணியம் தொகுப்புரையாற்றினார். விழா ஏற்பாடுகளை மாவட்ட கரோனோ விழிப்புணர்வு பிரச்சாரக் குழு உறுப்பினர் நூலகர் முத்துக்கிருஷ்ணன், சிவராம் கலைக்கூட ஆசிரியர் கணேசன், வாசகர் வட்ட நிர்வாகி முத்துசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்