கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட 2 நாட்களுக்கு (ஆகஸ்ட் 2 மற்றும் 3-ம் தேதி) தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆடிக் கிருத்திகை மற்றும் ஆடிப் பெருக்கு விழா அடுத்தடுத்து வருவதால், மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உலக பிரசித்திப் பெற்ற அண்ணாமலையார் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் ஆகஸ்ட் 1-ம் தேதி (நேற்று) முதல் 3-ம் தேதி (நாளை) வரை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை ஆட்சியர் பா.முருகேஷ் பிறப்பித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, சுற்றுலாத்தலங் களையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையை பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு ஆகஸ்ட் 2-ம் தேதி (இன்று) மற்றும் 3-ம் தேதி (நாளை) அனுமதி இல்லை என பொதுப்பணித் துறை நேற்று அறிவுறுத்தி யுள்ளது.
ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு, சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பலகையை தண்டராம்பட்டில் இருந்துசாத்தனூர் அணை செல்லும் சாலையில் உள்ள முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago