ஆவடி விமானப்படை பயிற்சி நிறைவு விழா: சவால்களை சமாளிக்க திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்- வீரர்களுக்கு ஏர் கமாடோர் அறிவுரை

By செய்திப்பிரிவு

தங்கள் பணியில் எழும் சவால்களை சமாளிக்க திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று, ஆவடி விமானப்படை பயிற்சி நிலையத்தில், பயிற்சி முடித்த வீரர்களுக்கு, பயிற்சி மையத்தின் தலைவர் ஏர் கமாடோர் எஸ்.சிவகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் இந்திய விமானப்படை நிலையம் உள்ளது. இங்கு விமானப்படையில் சேரும் வீரர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, இந்த நிலையத்தில் உள்ள மெக்கானிக்கல் போக்குவரத்து பயிற்சி மையத்தில் 300 வீரர்களுக்கு கடந்த 24 வாரங்களாக பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

இப்பயிற்சியின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. பயிற்சி மையத்தின் தலைவர் ஏர் கமாடோர் எஸ்.சிவக்குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பயிற்சியில் சிறந்து விளங்கிய மனோகர்லால், பாயினின் சாய்சந்திரன் தேஜா ஆகியோருக்கு பரிசுகளையும், சிறந்த ஆல்-ரவுண்டர் கோப்பையை பிரகாஷ் சந்திர சாஹுவுக்கும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய சிவக்குமார், “கடின உழைப்பு மற்றும் ஒழுக்கத்தின் மூலம் வீரர்கள் தங்களது துறையில் சிறந்த விளங்க வேண்டும். மேலும், தங்கள் பணியில் எழும் சவால்களை சமாளிக்க திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்