காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் உள்ளிட்ட 4 ஊராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியச் செயலர் ராஜ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் வி.சோமசுந்தரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். மாநில அமைப்புச் செயலர் வாலாஜாபாத் கணேசன், முன்னாள் மக்களவை உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட வேண்டிய வேட்பாளர்கள், வெற்றி பெறுவதற்கான வியூகம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், அதிமுக அரசால் தொடங்கப்பட்ட திட்டங்கள், பாதியில் நிறுத்தப்பட்டு ஒப்பந்ததாரர்கள் மாற்றப்படுவதாகவும், இதனால் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினர்.
அப்போது, “சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு பொதுமக்கள் வாக்களித்தாலும், இப்போது மக்கள் எதிர்ப்பு திமுகவுக்கு கடுமையாக உள்ளது. இதை உள்ளாட்சி தேர்தலில் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இதேபோல் அவளூர், மாகரல், இளையனூர் வேலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago