அரியலூர் மாவட்டம் ஆண்டி மடம் அருகிலுள்ள தென்னூர் கிராமத்தில் நுண்ணீர்ப் பாசனம் அமைப்பது குறித்து விவசா யிகளுக்கு நேற்று பயிற்சி யளிக்கப்பட்டது.
வேளாண் துறை சார்பில் நடத்தப்பட்ட இப்பயிற்சிக்கு அரியலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் இரா.பழனி சாமி தலைமை வகித்து, நுண்ணீர்ப் பாசனத்தின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசினார்.
ஆண்டிமடம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் ராஜலட்சுமி முன்னிலை வகித்து, வேளாண் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டுவரும் மானியத் திட்டங்கள், வேளாண் விரிவாக்க மையத்தின் மூலம் விநியோகிக்கப்படும் இடுபொ ருள்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கினார்.
மேலும், நுண்ணீர்ப் பாசனம் அமைக்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சிய ளித்தனர். முன்னதாக வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் கலைமதி வரவேற்றார்.
ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் ஆரோக்கிய ராஜ் செய்திருந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago