கரூர் மாவட்டத்தில், கரோனா 3-வது அலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, இன்று(ஆக.1) முதல் ஒரு வாரத்துக்கு கரோனா விழிப் புணர்வு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படும் என ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றின் 3-வது அலையிலிருந்து தற்காத்துக்கொள்வது, தொற்றைக் கட்டுப்படுத்துவது, தொற்று வராமல் தடுப்பது உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று(ஆக.1) முதல் 7-ம் தேதி வரை விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம், பேரணி, விழிப்புணர்வு குறும்படங் கள் திரையிடல் உள்ளிட்டவை நடத்தப்பட உள்ளன. மேலும், கரோனா பெருந்தொற்று விழிப்பு ணர்வு என்ற பொதுத் தலைப்பில் ஓவியம், குறும்படம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
அதன்படி, ஓவியப் போட்டிக்கு ஏ4 அளவு காகிதத்தில் வண்ணப் படங்களை வரைந்தும், கட்டுரைப் போட்டிக்கு 150 வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு பக்க அளவில் கட்டுரை எழுதியும் அனுப்ப வேண் டும். மீம்ஸ் மற்றும் ஸ்லோகன் போட்டிக்கு 2 வரிகள் கொண்ட தாகவும், குறும்படப் போட்டிக்கு 2 நிமிடங்கள் கொண்டதாகவும் தங்களின் படைப்புகளை வழங்க வேண்டும். இப்போட்டிகளில் பங்கு பெற வயது வரம்பு கிடையாது.
இப்போட்டிகளில் பங்கெடுக்க விரும்புவோர் தங்களின் பெயர், வாட்ஸ்அப் எண், மின்னஞ்சல் முகவரி, வீட்டின் முழு முகவரி ஆகிய விவரங்களுடன் covidawarenessiec@gmail.comb என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 94987 47670 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தங்களின் படைப்புகளை நாளை மறுநாள்(ஆக.3) இரவு 12 மணிக் குள் அனுப்ப வேண்டும். சிறப்பான படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங் கப்படும். மேலும், சிறந்த ஓவியங் கள், கட்டுரைகள் மற்றும் குறும் படங்கள் ஆட்சியர் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்படும்.
கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ‘கரோனா இல்லா கரூர்- கைகழுவு, கவசமிடு, விலகியிரு' என்ற விழிப்புணர்வு வாசகம் உரு வாக்கப்பட்டுள்ளது. இதை மனதில் வைத்து, கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக் கைகளில் பொதுமக்கள் அனை வரும் தங்களின் முழுபங்களிப்பை வழங்க வேண்டும் என தெரிவித் துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago