உரிய காரணங்களின் அடிப்படை யில் மனு செய்தால் நளினி, முருகனுக்கு பரோல் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்யும் என சட்டத்துறை அமைச் சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டை அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.93 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகு பதி கூறியதாவது: உயர் நீதிமன் றத்தின் வழிகாட்டுதல்படி வெளிப் படைத் தன்மையோடு நீதிமன்ற பணியாளர்கள் தேர்வு நடை பெற்று வருகிறது. உயர் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட உரிய கார ணங்களின் அடிப்படையில்தான் பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிக் கப்பட்டது.
இதேபோல, உரிய காரணங் களின் அடிப்படையில் மனு செய்தால் நளினி, முருகன் ஆகியோருக்கும் பரோல் வழங்கு வது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்யும்.
தேர்தல் அறிக்கையில் கூறிய படி, உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க அனைத்து முயற்சிகளையும் மேற் கொள்வோம் என்றார்.
ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி யில், எம்எல்ஏ வை.முத்துராஜா, மருத்துவக் கல்லூரி முதல்வர் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago