அரக்கோணம் மற்றும் ராணிப் பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைகாக ‘ஆன்லைனில்’ விண் ணப்பிக்க வாய்ப்பளிக்கப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் மற்றும் ராணிப் பேட்டையில் செயல்படும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில், அரக்கோணம் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிட்டர், எலக்ட்ரீஷியன், மோட்டார் வாகன மெக்கானிக், டர்னர், கிரைண்டர் மெக்கானிக், சுருக்கெழுத்தர் மற்றும் செயலக உதவியாளர் (ஆங்கிலம்), டீசல் மெக்கானிக், ஸ்மார்ட்போன் டெக்னீஷியன் மற்றும் ஆப் டெஸ்டர் ஆகிய படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதேபோல், ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிட்டர், எலக்ட்ரீ ஷியன், வெல்டர், அட்வான்ஸ் மெக்கானிக் டூல்ஸ் ஆபரேட்டர், பெயின்டர், மோட்டார் வாகன மெக்கானிக் படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும், வயர்மேன் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட படிப்புகளுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வரும் 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
வேலூர்
வேலூர் அப்துல்லாபுரத்தில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிட்டர், எலெக்ட்ரீஷியன், டர்னர், மெக்கானிஸ்ட், மோட்டார் வெயிக்கல் மெக்கானிக், டிராப்ட்ஸ்மேன் சிவில் ஆகிய தொழிற் பிரிவுகளிலும், 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வயர்மேன், வெல்டர், ஷீட் மெட்டல் ஒர்க்கர், கார்பென்டர், தோல் பொருள் தயாரிப்பு, காலணி தயாரிப்பு பிரிவுகளில் சேர்க்கை தொடங்கியுள்ளது.எனவே, ஆர்வமும் தகுதியும் உள்ள மாணவர்கள் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதிக்குள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.750 உதவித்தொகை, லேப்டாப், மிதிவண்டி, பாடப்புத்தகம், சீருடை, காலணி வழங்குவதுடன் பயிற்சி முடித்தவர்களுக்கு தொழிற் பழகுநர் பயிற்சியுடன் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
இதுகுறித்த விவரங்களுக்கு 0416-2290848 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், அசல் கல்வி சான்றுகளுடன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளார்.
பயிற்சி முடித்தவர்களுக்கு தொழிற் பழகுநர் பயிற்சியுடன் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago