அரசின் மானிய திட்டத்தில் - மீன் வளர்ப்பு தொழில் தொடங்க வாய்ப்பு :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் அரசின் மானியத் திட்டத்தின் கீழ் புதிதாக மீன் வளர்ப்பு தொழிலை தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித் துள்ளார்

இதுகுறித்து, அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பை விரிவுபடுத்தி மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் ஒரு ஹெக்டேரில் (2.47 ஏக்கர்) ரூ.7 லட்சம் செலவில் மீன்குளம் அமைத்திட 50 சதவீதம் மானியம் மற்றும் மீன் வளர்ப்பு செய்திட ஆகும் உள்ளீட்டு செலவின தொகை ரூ.1.50 லட்சத்தில் 40 சதவீதம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

இதில், 0.25 ஹெக்டேர் முதல் ஒரு ஹெக்டேர் வரை உள்ள பரப்பில் மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப் படையிலும் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மீன் வளர்ப்பில் ஆர்வம் உள்ள வர்கள் வேலூர் மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகலாம் அல்லது 0416-2240329 அல்லது 93848-24248 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்