நீலகிரி மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் 500 பேருக்கு, ரூ.9.75 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வழங்கினார்.
உதகையிலுள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நலவாரியம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமை வகித்து, 500 தொழிலாளர்களுக்கு ரூ.9.75 லட்சம்மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அவர் பேசும்போது, "தமிழ்நாடு அரசால் 17 நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நலவாரியங்கள் மூலமாக ஏழை, எளிய தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், ஓய்வூதியம் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவுபெற்ற 1,392 தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக தங்களுடைய பதிவைபுதுப்பித்துக்கொள்ள இயலாத அமைப்புசாரா நலவாரிய உறுப்பினர்களுக்கு, டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இணையவழியாக பெறப்பட்ட கேட்பு மனு விண்ணப்பங்கள் நேரடியாக பெறப்பட்டு, பரிசீலனை செய்யப்பட்டு தமிழ்நாடு அளவில் 50,000 தொழிலாளர்களுக்கும், நீலகிரி மாவட்டத்தில்500 தொழிலாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட வுள்ளன" என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கீர்த்தி பிரியதர்சினி. தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) லெனின்ஆகியோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago