திருப்பூர் மத்திய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சூர்யா நகரிலுள்ள வேஸ்ட் குடோனில் நடந்த கொலை வழக்கில், மதுரை மாவடத்தை சேர்ந்த ஜெயராம் (20) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர், ஏற்கெனவே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகை யில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டுவந்த ஜெயராமை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாநகரக் காவல் ஆணையர் வே.வனிதா உத்தரவிட்டார்.
கோவை மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ள ஜெயராமிடம், அதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாநகரில் 35 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, திருப்பூர் திருமுருகன்பூண்டி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை அண்ணா நகர் முதல் வீதியை சேர்ந்த சதீஷ் (எ) பார்த்தா (24), கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவரும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால், மாநகரக் காவல் ஆணையர் வே.வனிதா உத்தரவின்பேரில், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை, கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரிடம் வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago