அரசுப் பேருந்தில் கியர் ராடுக்கு பதிலாக - இரும்புக் குழாய் பொருத்தி இயக்கியதாக பயணிகள் புகார் :

By செய்திப்பிரிவு

திருப்பூர் அரசுப் பேருந்தில் கியர் ராடுக்கு பதிலாக, இரும்பு ராடு பொருத்தி ஓட்டியதாக பயணிகள் புகார் கூறியுள்ளனர்.

கரோனா ஊரடங்கு தளர்வு களுக்கு பிறகு, தமிழகத்தில் பொதுப்போக்குவரத்தான அரசுப் பேருந்துகள் கடந்த 50 நாட்களுக்கு மேலாகஇயக்கப்பட்டு வருகின்றன. திருப்பூர் பணிமனைக்கு உட்பட்ட அரசுப்பேருந்து, குமுளி - திருப்பூர் வரை நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேற்கண்ட பேருந்தின் கியர் ராடு பழுதடைந்ததாக தெரிகிறது. இதையடுத்து, கியர் ராடுக்கு பதிலாக இரும்பு குழாய் போன்ற ராடை பொருத்தி, ஓட்டுநர் பேருந்தை இயக்கி உள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக பயணிகள் கூறும்போது, "அரசுப் பேருந்தை நம்பிநாள்தோறும் ஏராளமான பயணிகள் உள்ளனர்.

கரோனா ஊரடங்கு அமலில்இருந்த நேரத்தில், அரசுப் பேருந்துகளை முறையாக பராமரிக்காததன் விளைவுதான் இது.

இதுபோன்று தொலைதூரம்பயணிக்கக்கூடிய அரசுப் பேருந்தின்அவல நிலையை, அரசுப் போக்குவரத்துக் கழகம் உடனடியாக சரி செய்ய வேண்டும்" என்றனர்.

அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, "தொடர்புடைய பேருந்தில் கியர் ராடு பிரச்சினை தொடர்பாக விசாரிக் கிறோம்" என்றார். திருப்பூரில் கியர் ராடுக்கு பதிலாக இரும்பு ராடு பொருத்தி இயக்கப்பட்ட அரசுப் பேருந்து.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்