ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனம், பாஷ் பவர் டூல்ஸ் டிவிஷன் சார்பில், பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் அவளூர், தென்னேரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் காத்திருப்பு அறை, சுற்றுச் சுவர், வாகனங்கள் நிறுத்துமிடம், கட்டிட மேற்கூரை அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகள் நிறைவுற்ற நிலையில், மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி தலைமை வகித்தார். தனியார் நிறுவன மேலாளர் அப்துல் வஹாப் கட்டராகி, மருத்துவமனைகளுக்கு உபகரணங்களை வழங்கினார். ஹேண்ட இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவன முதன்மைச் செயல் அலுவலர் கிருஷ்ணன், கரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்களுக்கு பரிசு வழங்கினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago