விழுப்புரம் மாவட்டத்தில் - 4.35 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் த.மோகன் தலைமையில் நடை பெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் ஆட் சியர் கூறியது:

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (ஆக. 1) துண்டுபிரசுரங்கள், சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு பதிவுகள் மேற்கொள்ளுதல், உள்ளுர் கேபிள் டி.வி , தொலைக்காட்சி நிகழ்வுகள் வாயிலாக கரோனா நோய் தடுப்புநடவடிக்கைகள் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்படும்.

கைகளை தூய்மையாக வைத் துக்கொள்வதன் அவசியம், முகக்கவசம் அணிவதன் அவசியம், சமூக இடைவெளியை கடை பிடித்தல், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என மக்கள் கூடும் இடங்களில் நோய் தடுப்புவழிமுறைகள் குறித்து 2-ம் தேதி விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும். இவ்வாறாக 7-ம் தேதி வரை தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

ரேஷன் கடைகள், பெட்ரோல் பங்குகள், கோயில்களில் தடுப் பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன.மாவட்ட நிர்வாகம் சார்பாக மேற்கொள்ளப்படும் கரோனா வழி முறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து தங்கள் துறை சார்ந்த அலுவலர் மற்றும் பணியாளர்களை ஈடுபடுத்தி நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நன்கு அறிந்துகொள்ளும் வகை யில் விழிப்புணர்வு நிகழச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் 17 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிபோட இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது. தொடர்ச்சியாக மேற் கொண்ட நடவடிக்கைகளால் இதுவரை 4.35 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்களில் 68 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்று ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்