விழுப்புரம் ஆட்சியர் அலுவல கத்தில் நேற்று மாலை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது விவசாயிகள் கூறியது: விழுப்புரம் அருகே உள்ள தளவானூர் தடுப்பணை சீரமைப்புப் பணி களை விரைந்து முடிக்க வேண்டும்.ஏரிகளில் உள்ள மதகுகள், கலிங்கல்களை சீரமைக்க வேண்டும். மீன்பிடிக்க குத்தகைக்காரர்கள் நீர்நிலைகளில் உள்ள நீரை வெளி யேற்றுகின்றனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டும். பொதுப்பணிக்கு சொந்தமான ஏரிகளில் உள்ள கருவேலமரங்களை அகற்ற வேண்டும். தோட்டக்கலைத் துறையில் கோலியனூர், முகையூர் ஒன்றியங்களில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் மட்டுமேவிதைகள் இருப்பு உள்ளது. இத்துறைக்கு சொந்தமான அலுவ லகத்தை ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்திற்கு கொண்டுவர வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விற்பனை செய்யப் படும் தானியங்களுக்கான பணபட்டுவாடா உடனுக்குடன் அளிக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிகப் படுத்த வேண்டும்.
பிரதமரின் உழவர் காப்பீடுதிட்டத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இழப்பீடு கிடைக்க வில்லை. தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களில் புதிய கடன் வாங்க தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தடையில்லா சான்று வேண்டும் என்று கூட்டுறவுத் துறை கட்டாயப்படுத்துகிறது. இச்சான்று பெற ஒவ்வொரு வங்கி யும் வெவ்வேறு கட்டணம் கேட் கின்றனர்.
விவசாயக்கடனை திருப்பி செலுத்த 8 மாதம் கால அவகாசம் அளிக்கப்படுகிறது. வேறு சில மாவட்டங்களில் 1 ஆண்டு கால அவகாசம் அளிக்கின்றனர் என்று தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்து ஆட்சியர் மோகன் கூறியது:
தளவானூர் அணைக்கட்டை இன்று (நேற்று) ஆய்வு மேற்கொண்டேன். விரைவில் அணை சீரமைப்புப் பணிகள் முடிவடையும். ஏரிகளில் உள்ள மதகுகள், கலிங்கல்கள் சீரமைக்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் பயிர்கடன் பெற தடையில்லா சான்றை கூட்டுறவு வங்கியே சம்பந்தப்பட்ட வங்கிகளில் பெற்றுக்கொள்ளவும், மற்ற மாவட்டங்களில் இதை எந்த முறையில் அணுகுகிறார்கள் என அறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் . தற்போது 32 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இதனை 50-ஆக அதிகரிக்கவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்கிற்கு கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago