சிவகங்கை அரசு மருத்துவமனையில் - பணி ஆணை இல்லாமல் பணிபுரிந்த பல்நோக்கு ஒப்பந்த பணியாளர்கள் : ஊதியம் வழங்க முடியாமல் மருத்துவமனை நிர்வாகம் குழப்பம்

By செய்திப்பிரிவு

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த முறையில் பணிபுரிந்த பல்நோக்கு பணியாளர்கள் சிலர், உரிய பணி ஆணையின்றி பணிபுரிந்தது தெரிய வந்துள்ளது.

கரோனா இரண்டாவது அலை பரவல் அதிகரித்தபோது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், பல்நோக்கு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கிரிஸ்டல், பைவ் ஸ்டார் ஆகிய நிறுவனங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் மூலம் 200-க்கும் மேற் பட்ட பணியாளர்கள் நியமிக்கப் பட்டனர். தற்போது கரோனா பரவல் குறைந்ததை அடுத்து, தற்காலிக பணியாளர்களை பணிநீக்கம் செய்ய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தங்களுக்கு 3 மாதங்களுக்கான ஊதியம் வழங்கக் கோரியும், பணியில் தொடர அனுமதிக்குமாறும் வலியுறுத்தியும் சுகாதாரத் துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மனு அளித்தனர். இதையடுத்து அவர்கள் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு மே மாத ஊதியம் வழங்க சிவகங்கை அரசு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பாக மருத்துவமனை நிர் வாகம் கணக்கெடுத்தபோது, ஒப்பந்த பணியாளர்களில் சிலர் பணி ஆணை பெறாமலேயே பணிபுரிந்தது தெரியவந்தது. இதனால் அவர்களுக்கு எந்த அடிப்படையில் ஊதியம் வழங்குவது எனத் தெரியாமல் மருத்துவ நிர்வாகத்தினர் குழப்பமடைந்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, "பணி ஆணை இல்லாதவர்களுக்கு மட்டும் மே மாத ஊதியத்தை வழங்கவில்லை. மற்றவர்களுக்கு வழங்கிவிட்டோம். பணி ஆணை இல்லாமல் பணிபுரிந்தவர்கள், தாங்கள் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் மூலம் பணிக்கு வந்த தாகக் கூறுகின்றனர். ஆனால் அதற்கான ஆணை அவர்களிடம் இல்லை. எனினும், அவர்கள் பணிபுரிந்தது உண்மை என்பதால், அவர்களுக்கும் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அதேபோல் அனைவருக்கும் ஜூன், ஜூலை மாதங்களுக்குரிய ஊதியம் வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்