அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், மாநில பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள 700 தொழிலாளர்களுக்கு ரூ.13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பொ.சந்திரசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன், தொழிலாளர் உதவி ஆணையர் கு.விமலா, கண்காணிப்பாளர் ஜா.நூருல்லா மற்றும் அரசு அலுவலர் கள் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் ஆட்சியர் அலுவ லகத்தில், ஆட்சியர் வெங்கட பிரியா தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாநில பிற் படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச் சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.
பின்னர், அவர் பேசியது:
பெரம்பலூர் மாவட்டத்தில் தொழி லாளர் நல அலுவலகத்தில் 48,854 பேர் பதிவு செய்துள்ளனர். இதில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த 900 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.16.08 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் தற்போது வழங்கப் பட்டுள்ளன என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago