விசைத்தறி கூலி பேச்சுவார்த்தை ஆக.11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு :

By செய்திப்பிரிவு

விசைத்தறி கூலி பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இதில், ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்காததால் விசைத்தறியாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.

திருப்பூர் - கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கத் தலைவர் வேலுச்சாமி தலைமையிலும், சோமனூர் பழனிச்சாமி முன்னிலையிலும் விசைத்தறியாளர்கள் சங்கத்தினர் நேற்று பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தனர். திருப்பூர் மாவட்ட தொழிலாளர்கள் நலத் துறை துணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு, மாவட்ட துணை ஆணையர் செந்தில் குமரன் ஏற்பாடு செய்திருந்தார். ஜவுளி உற்பத்தியாளர்கள் இருவர் மட்டுமே வந்திருந்ததால், ஆகஸ்ட் 11-ம் தேதிக்கு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

ஏழு ஆண்டுகள் கழித்துகூடகூலி உயர்வு பேச்சுவார்த்தைக்கு வராத ஜவுளி உற்பத்தியாளர்களால், விசைத்தறியாளர்கள் அதிருப்தியடைந்தனர்.

திருப்பூர்-கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கத் தலைவர் வேலுச்சாமி, பொருளாளர் முத்துக்குமாரசாமி, துணைச் செயலாளர் பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்