ஒரே லாரியில் 33 மாடுகளை கொண்டுசென்ற 2 பேர் கைது :

By செய்திப்பிரிவு

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலை தெக்கலூர் அருகே அவிநாசி போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக கோவை நோக்கி சென்ற ஆந்திரா மாநில பதிவெண் கொண்ட லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். லாரி முழுவதும் மாடுகள் இருந்தன. தார்பாயால் மூடி, காற்றோட்டம் இல்லாமல் இருந்தன.

மாடுகள் மிகவும் நெருக்கமாகவும், இடைவெளியின்றி ஒன்றுக் கொன்று உரசிக் கொண்டும், பாதுகாப்பு இல்லாத வகையிலும் அடைத்து வைத்து தஞ்சாவூரில் இருந்து பொள்ளாச்சிக்கு 33 மாடுகள் கொண்டு செல்லப்படுவதும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தஇளங்கோ என்பவர் மாடுகளை அனுப்பி வைத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவிநாசி போலீஸார் வழக்கு பதிந்து, லாரியை ஓட்டி வந்த திண்டுக்கல் நிலக்கோட்டை அவையம்பட்டியைச் சேர்ந்த சின்னசாமி(50), ஒட்டன்சத்திரம் அத்திக்கோம்பை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (45) ஆகியோரை கைது செய்தனர்.

லாரியையும் பறிமுதல் செய்தனர். பெருந்துறை அருகே விஜயமங்கலம் பகுதியிலுள்ள கோசாலைக்கு 33 மாடுகளையும் அனுப்பிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்