தருமபுரியில் தக்காளி பழக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை : பாமக எம்எல்ஏ அமைச்சரிடம் மனு

By செய்திப்பிரிவு

தருமபுரியில் தக்காளி பழக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி யில், தருமபுரி பாமக எம்எல்ஏ எஸ்பி.வெங்டேஸ்வரன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை மனு அளித்தார். அம்மனுவில் கூறியிருப்பதாவது:

தருமபுரி மாவட்டத்தில் தக்காளி பழங்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. சில நேரங்களில் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. தக்காளியை மதிப்பு கூட்டும் வகையில் தருமபுரியை மையமாக கொண்டு தக்காளி பழக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். இதேபோல் சிறுதானியம், பயிறுவகை கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.

நல்லம்பள்ளி வட்டம் இண்டூரில் தானியகிடங்கு சமுதாய கூடத்தில் இயங்கி வருகின்றது. தானிய கிடங்கிற்கு புதிய கட்டிடம் அமைக்க வேண்டும். தொப்பூரில் பூக்களில் இருந்து வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். சிறுதானிய ஆராய்ச்சி நிலையம், கிராமங்கள் தோறும் தானிய களங்கள் (கதிர் அடிக்கும்களங்கள்) அமைக்க வேண்டும். தருமபுரியில் பூ விற்பனை நிலையம், நல்லம்பள்ளியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்