கேவிஎஸ் குழுமம் சார்பில் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 30 படுக்கைகள் அமைக்கப் பட்டுள்ளதை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில், கேவிஎஸ் குழுமம் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய, 30 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்விற்கு திமுக பிரமுகர், கேவிஎஸ் குழும இயக்குநர் கேவிஎஸ் சீனிவாசன் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதன் பின்னர், தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வெங்கடேசன், மஞ்சுளா தம்பதியின் மகன் ஹரி (16) விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்தார். ஹரியின் மருத்துவ செலவிற்காக திமுக பிரமுகர் கேவிஎஸ் சீனிவாசன், ரூ.20 ஆயிரம் நிதியுதவி வழங்க முன்வந்தார். நிதியுதவியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆர்.காந்தி ஆகியோர் மஞ்சுளாவிடம் வழங்கினர். இந்நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி, எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி, எம்.எல்.ஏ.,க்கள் மதியழகன், பிரகாஷ், கேவிஎஸ் குழும நிர்வாகிகள் சுப்பிரமணியன், சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago