கள்ளக்குறிச்சியில் ஆர்கேஎஸ் கல்வி நிறுவனமும், கள்ளக்குறிச்சி மாவட்ட இந்திய மருத்துவ சங்கமும் இணைந்து நடத்திய ‘உயர்வு தரும் விதை விதைக்கும் விழா’ நேற்று தொடங்கியது.
முதற்கட்டமாக பனை விதைகள் தொடர்ந்து விதைக்கும் நிகழ்வு தொடங்கியுள்ளது. விழாவிற்கு ஆர்கேஎஸ் கல்வி நிறுவனங்கள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட இந்திய மருத்துவ சங்கத்தின் தலை வருமான மருத்துவர் க.மகுடமுடி தலைமை வகித்தார். இந்திய மருத் துவ சங்கத்தின் மாநில முன்னாள் துணைத் தலைவர் எஸ்.நேரு, இந்திய மருத்துவ சங்கத்தின் கள்ளக்குறிச்சி செயலாளர் பி.திருநாவுக்கரசு, பொரு ளாளர் பி.சுரேஷ்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பசுமைக் காவலர் விருதாளர் ஆக்கம் அ.மதிவாணன் கலந்து கொண்டு, பனை விதைகளை விதைத்து நிகழ்வை தொடங்கி வைத்தார். 300-க்கும் மேற்பட்ட விதைகளை கல்லூரி வளாகத்தில் மருத்துவ சங்கத்தி னரும், ஆர்கேஎஸ் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களும், தேசிய மாணவர் படை இயக்கத்தினரும், சுற்றுச் சூழல் குழுவினரும், கல்வியியல் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் விதைத்தனர்.
தாளாளர் ஜி.எஸ்.குமார், பள்ளித் தலைவர் டி. மணி வண்ணன், பள்ளித் தாளாளர் பி.திரு ஞானசம்பந்தம், கல்லூரி செயலாளர் என்.கோவிந்தராஜூ, பொருளாளர் ஏ.தமிழ்மணி, எலவனாசூர்கோட்டைஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சி.சாமிதுரை, கல்லூரிமுதல்வர் மற்றும் நிர்வாக அலுவல ருமான கு.மோகனசுந்தர், துணை முதல்வர் பெ.ஜான்விக்டர் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தி ருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago