நிலக்கடலை சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள் : ஊடுபயிராக துவரை விதைப்பு

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரீப் பருவத்தில் ஆடிப்பட்டத் திற்கு ஏற்ற பருவமழை தற்போது பெய்து வருவதால், மானாவாரி பயறு வகைகளான உளுந்து, காராமணி, பச்சைப் பயறு, துவரைப் பயிர்களும், எண்ணெய்வித்துப் பயிரான நிலக்கடலை, சூரியகாந்தி, ஆமணக்கு ஆகிய பயிர்களை சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக நிலக்கடலை சாகுபடியில் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை,ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி வட்டத்தில் ஆயிரக்கணக் கான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக விவசாயி கள் கூறும்போது,மழையை மட்டுமே நம்பி, ஜூன், ஜூலை மாதங்களில் நிலக்கடலை விதைக்கப்படும்.தொடர்ந்து ஆகஸ்டில் பொழியும் பருவ மழையினை கொண்டு நிலக்கடலை செடிகள் அறுவடைக்கு தயாராகும்.

செக்கு மூலம் தயாரிக்கப்படும் கடலை எண்ணெய் பயன்பாடு அதிகரித்துள்ள தால், நிலக்கடலை தேவையும்அதிகரித்துள்ளது.

ஒரு படி நிலக்கடலை ரூ.160-க்கு விலைக்கு வாங்கி விதைக்கிறோம். நிலக்கடலையில் இழப்பு ஏற்பட்டால், ஊடுபயிரான துவரை சாகுபடியில் ஈடுகட்ட முடியும். தற்போது பெய்யும் மழையால் நிலக்கடலை விளைச்சல் கைக் கொடுக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது, என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE