நெடுஞ்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் கடன் பிரச்சினையால் தூக்கிட்டு தற்கொலை :

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே நெடுஞ்சேரி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் முருகானந்தம்(45). அதிமுகவைச் சேர்ந்த இவர், நேற்று காலை நெடுஞ்சேரி ஆற்றங்கரை பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள், முருகானந்தத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவாருர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகவும், பூச்சிக்கொல்லி மருந்து குடித்திக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குடவாசல் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு, முருகானந்தம் பலரிடம் இருந்து பல லட்ச ரூபாய் கடன் பெற்றிருந்ததாகவும், அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கடனை திருப்பிக்கேட்டு நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முருகானந்தத்துக்கு இந்திரா என்ற மனைவியும், ஐஸ்வர்யா, பேபி ஷாலினி என்ற 2 மகள்களும் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்