தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரும், திரைப்பட இயக்குநருமான கவுதமன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெரம்பலூர் மாவட்டம் பேரளி அருகில் அரியலூர்- பெரம்பலூர் இடையே புதிதாக திறக்கப்பட்ட சுங்கச்சாவடியில் சுங்கவரி வசூல், மக்களின் போராட்டத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரியலூர், பெரம்பலூரைச் சுற்றியுள்ள சிமென்ட் ஆலைகளின் லாபத்துக்காக சாலைகளை விரிவாக்கம் செய்துவிட்டு, அப்பாவி மக்களிடமும், பொது போக்குவரத்து நிறுவனங்களிடமும் அதற்கான வரியை வசூலிக்க நினைக்கின்றனர். பெரம்பலூர், அரியலூர் மக்களைப் பாதிக்கும் பேரளி சுங்கச் சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும். மீண்டும் அங்கு சுங்கச் சாவடி திறக்கப்பட்டால், மக்களை திரட்டி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago