'கரூரில் டிசம்பரில் தேசிய சப்ஜூனியர் எறிபந்து விளையாட்டுப் போட்டிகள்' :

By செய்திப்பிரிவு

கரூரில் வரும் டிசம்பரில் தேசிய சப்ஜூனியர் எறிபந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக, அகில இந்திய எறிபந்து கழகத் தலைவர் எஸ்.மணி தெரிவித்தார்.

கரூரில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியது: கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை. இந்நிலையில், தேசிய அளவிலான எறிபந்து விளையாட்டுப் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி, 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சப் ஜூனியர் பிரிவு எறிபந்து விளையாட்டுப் போட்டிகள் வரும் நவம்பரில் தெலங்கானாவில் நடைபெற உள்ளன. இதில், 21 அணிகள் பங்கேற்க உள்ளன.

இதேபோல, 17 வயதுக்கு மேற்பட்டோருக்கான சீனியர் பிரிவு எறிபந்து விளையாட்டுப் போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் 2022-ம் ஆண்டில் நடைபெறுகிறது. முன்னதாக, 15 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய அளவிலான ஜூனியர் எறிபந்து விளையாட்டுப் போட்டிகள் கரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளன. மேலும், ஒலிம்பிக் போட்டிகளில் எறிபந்து விளையாட்டை இடம்பெறச் செய்வதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகின்றன என்றார். அவருடன், மாவட்டச் செயலாளர் ஜீவா உள்ளிட்டோர் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்