அரசு போக்குவரத்து கழகத்தில் தனியார் பங்களிப்புத் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் அரசு போக்குவரத்துக்கழக சிஐடியு தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) மத்திய சங்கத் தலைவர் கே.கார்த்திக்கேயன் தலைமை வகித்தார்.
கந்தர்வக்கோட்டைஎம்எல்ஏ எம்.சின்னத்துரை, தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் சிஐடியு செயலாளர் ஆர்.மனோகரன்
புதுக்கோட்டை மண்டல பொதுச் செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, செயலாளர் ஏ.ஸ்ரீதர் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய நிதிநிலை அறிக்கையில் நகர்ப்புற போக்குவரத்து வசதிக்கு ஒதுக்கிய தொகையை போக்குவரத்துக் கழகங்களுக்கே மீண்டும் வழங்க வேண்டும். மின்சாரப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகங்களுக்கு மானியம் வழங்க வேண்டும். மத்திய அரசு 20 ஆயிரம் நகரப் பேருந்துகளை இயக்கப் போவதாகவும், இந்தத் திட்டத்தை தனியார் பங்களிப்புடன் நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago