குழித்துறையில் 17 மிமீ மழை :

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக வெயில் அடித்து வருகிறது. அதேநேரம், மலையோரப் பகுதிகளில் சாரல் மழை பெய்கிறது.நேற்று காலை வரை, அதிகபட்சமாக குழித்துறையில் 17 மிமீ மழை பெய்திருந்தது. களியலில் 15 மிமீ, சிற்றாறு ஒன்று, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, புத்தன்அணை, அடையைாமடை ஆகிவற்றில் தலா 6, சிவலோகம், சுருளகோட்டில் தலா7 மிமீ., மழை பெய்திருந்தது.

பேச்சிப்பாறை அணைக்கு 585 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர்மட்டம் 45 அடியாக உள்ளது. அணையில் இருந்து 636 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 73.84 அடியாக உள்ளது. 252 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 350 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது. முக்கடல் நீர்மட்டம் 24.4 அடியாக உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் மிதமான மழை பெய்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி பெய்த மழையளவு (மி.மீட்டரில்): கடனா- 3, குண்டாறு- 4, அடவிநயினார்- 3, ஆய்க்குடி- 4, தென்காசி, செங்கோட்டை, சிவகிரி-தலா 1.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்சநீர்மட்டம்): பாபநாசம்- 111 அடி (143 அடி), சேர்வலாறு- 118.27 அடி (156), மணிமுத்தாறு- 73.40 அடி (118), வடக்கு பச்சையாறு- 16.65 அடி (50), நம்பியாறு- 11.77 அடி (22.96), கொடுமுடியாறு- 29.25 அடி (52.25), கடனா- 76 அடி (85), ராமாநதி- 73.50 அடி (84), கருப்பாநதி- 68.96 அடி (72), குண்டாறு- 36.10 (36.10), அடவிநயினார்- 132.22 அடி (132.22).

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE