திருப்பூர் மாவட்ட சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கசெயலாளர் கே.உன்னிகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
திருப்பூர் மாநகரப் பகுதியில், குறிப்பாக நகரின் மையத்தில் அமைந்துள்ள அரிசிக்கடை வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி மற்றும் அதனை சார்ந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் சாக்கடை கட்டுவது, சாலை அமைப்பது, குழாய் பதிப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள், கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக நடைபெறுவதால், அவ்வழியே செல்லமுடியாமல் பல கிலோமீட்டர் சுற்றிச்செல்ல வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர்.
அரிசிக்கடை வீதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வணிக, வியாபார நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் நிலையில்,லாரி மற்றும் சரக்கு வேன் போக்குவரத்தும் அதிகமாக உள்ளது. சுமைப்பணி தொழிலாளர்களும் வேலை செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே மேற்கண்ட பணிகளை முழுமையாக ஒருங்கிணைத்து, திட்டமிட்ட முறையில் விரைவாக நிறைவேற்றி முடிக்க வேண்டும். அதிகாரிகள் தினமும் இந்த பணிகளை கண்காணித்து, மக்கள் நடமாட்டம் தடையின்றி தொடர்வதை உறுதிப்படுத்த வேண்டும். மேற்கூறிய பகுதிகளில் தொழிலாளர்கள் இயற்கைஉபாதைகளை கழிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளை ஏற்பாடு செய்து தர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago