விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் கரோனா தடுப்பூசி முகாமைஆட்சியர் மோகன் நேற்று தொடங்கிவைத்தார். தொடர்ந்து வணிக வளாகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்களா என கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
பின்னர் நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம், “ஆடி மாதத்தையொட்டி, அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் பெருமள வில் வருகின்றனர். இதனால் கரோனாதொற்று அதிகரிக்கும் சூழல் உள்ளது.
கோயில்களில் 10 வயதுக்கு உட்பட்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களை அனுமதிக்கக் கூடாது. கோயில் வளாகத்தில் பொங்கல் வைப்பது மற்றும் இதர ஆராதனைகளை கோயில் நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது. இறைவனை தரிசிக்க மட்டுமே அனுமதிக்க வேண்டும்” என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago