விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் - தமிழக அரசை கண்டித்து அதிமுவினர் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் தமிழக அரசை கண்டித்து அதிமுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படும், கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தரப்படும் என்பனஉள்பட பல்வேறு வாக்குறுதி களை அறிவித்து இருந்தது. இந்த வாக்குறுதிகளை ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுநிறைவேற்றவில்லை என கண்டனம் தெரிவித்து பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், தன் வீட்டின் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் திண்டிவனம் எம்எல்ஏ அர்ஜுணன் உள்ளிட்டோர், கிளியனூர் இந்திராநகரில் உள்ள தன் வீட் டின் முன்பு வானூர் எம்எல்ஏ சக்கரபாணி தலைமையில், விழுப்புரம் காந்தி சிலை அருகேமாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் பசுபதி தலைமையில் என 46 இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதே போல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டையில் முன்னாள் எம்எல்ஏ குமரகுரு, கள்ளக்குறிச்சி அதிமுக அலுவலகம் முன்பு எம்எல்ஏ செந்தில்குமார், வடக்க நந்தலில் முன்னாள் அமைச்சர் மோகன் தலைமையில் என 45 இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதே போல் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தில் 18- வதுவார்டில் எம்எல்ஏ கே.ஏ.பாண் டியன் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள், மாவட்ட அதிமுக அவைத் தலை வர் குமார், நகர செயலாளர் செந்தில்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன், முன்னாள் நகர செயலாளர் தோப்புசுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சேத்தியாத் தோப்புகுறுக்கு ரோட்டில் அருண்மொழி தேவன் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர் கூத்தப்பாக்கத்தில் அதிமுக அலுவலகம் அருகில் முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பு செய லாளர் சொரத்தூர் ராஜேந் திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரியிலும் ஆர்ப்பாட்டம்

தேர்தல் வாக்குறுதிகளை தமிழகத்தை ஆளும் திமுக நிறைவேற்றவில்லை என்று கூறி புதுச்சேரியிலும் அதிமுகவினர் உரிமைக் குரல் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உப்பளத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். கட்சிநிர்வாகிகள் 30க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் அன்பழகன் கூறும்போது, ‘‘தமிழகத்தில் தேர்தல் நேரத் தில் பொய்யான வாக்கு றுதிகளை கொடுத்து ஆட்சியில் அமர்ந்த திமுக 3 மாதங்களுக்கு மேலாகியும் தனது தேர்தல் கால அறிவிப்பினை ஒன்றைக்கூட செயல்படுத்தவில்லை’’ என்றார்.

இதேபோல் மேற்கு மாநில அதிமுக சார்பில் நேற்று லெனின் வீதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாநில கழக செயலாளர் ஓம்சக்திசேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்