திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 25-ம் தேதி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 25 ஆக இருந்த நிலையில், திருநெல்வேலி மாநகரில் யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. கரோனா 2-வது அலையின்போது பாதிப்பு கண்டறியப்படாத நாளாக அது இருந்தது. ஆனால், அடுத்த நாள் 26-ம் தேதி ஒருவருக்கு தொற்று உறுதியாகியிருந்தது. 27-ம்தேதி 5 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் நேற்று காலையில் வெளியாயின. அதில் திருநெல்வேலி மாநகரில் யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. அதேநேரத்தில் மாவட்டத்தில் 16 பேருக்கு பாதிப்பு உறுதி யாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago