ராணிப்பேட்டை மாவட்டத்தில் 29 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை செயல்படும் என மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்ப ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் நடப்பு கொள்முதல் பருவத்தில் இன்று (29-ம் தேதி) முதல் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை மேலபும்புதூர், பனப்பாக்கம், ரெட்டிவலம், ஜாகீர்தண்டலம், நெல்வாய், திருமால்பூர், நெமிலி, மகேந்திரவாடி, உளியநல்லூர், கீழ்களத்தூர், பெரும்புலிபாக்கம், அசநெல்லிகுப்பம், புதுக்கண்டிகை (சயனபுரம் ஊராட்சி), இலுப்பை தண்டலம், கணபதிபுரம், சேந்த மங்கலம் (பின்னாவரம் ஊராட்சி), சித்தேரி, சம்பத்துராயன் பேட்டை (சிறுணமல்லி ஊராட்சி), கடம்ப நல்லூர் (மாங்காட்டுச்சேரி), தச்சன்பட்டரை, ஆலப்பாக்கம், தர்மநீதி, சிறுகரும்பூர், மாமண்டூர்,மங்களம், புதூர், காவேரிப்பாக்கம், வேடந் தாங்கல், தக்கோலம் என 29 கிராமங் களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும்.
விவசாயிகளின் கைப்பேசிக்கு தகவல் தெரிவிக்கும் போது நெல்லினை உரிய ஆவணங்களுடன் கொள்முதலுக்கு கொண்டு வரவேண் டும்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago