பாரம்பரிய நெல்லை மீட்டெடுக்க இயற்கை விவசாயிகள் ஆலோசனை :

சேத்தியாத்தோப்பு அருகே மழவராயநல்லூர் கிராமத்தில் வேளாண்துறை சார்பில் பாரம்பரிய நெல் விதை பரவல் தொடர்பான இயற்கை விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

­முஷ்ணம் வட்டார வேளாண் துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் வேளாண் உதவி இயக்குநர் ஆறுமுகம், மழவராயநல்லூர் பாரம் பரிய இயற்கை விவசாயி நெல் செல்வம், ஓய்வுப்பெற்ற ஆசிரியர் மற்றும் பாரம்பரிய இயற்கை விவசாயி ராமதாஸ், ஆத்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் சந்தானகிருஷ்ணன்,கலைவாணன், ஊராட்சி மன்றத் தலைவர் பிரபாவதி வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் மழவராயநல்லூர், குமாரக் குடி, முடிகண்டநல்லூர் பகுதி விவசா யிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், அழிந்து வரும் பாரம்பரிய நெல் ரகங்களை விதை பரவல் மூலம் மீட்டெடுத்து, அதனை அனைத்து விவசாயிகளிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பாரம்பரிய நெல் ரகங்களால் மட்டுமே நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் நம் சமூகத்திற்கு கிடைக்கும். இதைச் செய்ய வேண்டியது அவசரத் தேவை என்றும் கூட்டத்தில் கூறப்பட்டது.

இக்கூட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட பாரம்பரிய இயற்கை நெல் விதைகள் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்