ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு வழங்கக்கோரி தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டு பருவம் தவறிய மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு வழங்கக் கோரியும், 2020-ம் ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் ஏக்கருக்கு ரூ.8,000 நிதியுதவி பெரும்பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் உள்ளதை வழங்கக்கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலாளர் மயில் வாகனன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் முத்துராமு முன்னிலை வகித்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் தாலுகா நிர் வாகிகள் கல்யாணசுந்தரம், முருகேசன், நவநீதகிருஷ்ணன், ராசு, ஜெயராஜ், பொன்னுச்சாமி, பெரியசாமி மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago