செல்போன் கோபுரத்தில் ஏறி பூசாரி தற்கொலை மிரட்டல் :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பொத்தப்பட்டியில் உள்ள கருப்பர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்துக்கொண்டு காலி செய்ய மறுப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, கோயில் பூசாரி ராசு, அங்குள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி நேற்று தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து, கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸார் உறுதி அளித்ததையடுத்து கோபுரத்தில் இருந்து ராசு இறங்கி வந்தார்.

பின்னர், விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளலாம் என கூறியதையடுத்து, அங்கிருந்தோர் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்