விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரிப்பு :

By செய்திப்பிரிவு

கரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிபோடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கப்பட்டது. விழுப்புரம்மாவட்டத்தில் ஆரம்பத்தில் தடுப்பூசி போடுவதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. தற்போது கிராமப்புறங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளா தவர்கள் அதிகம் உள்ளனர். இதனால் தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணியாற்ற வருகிறவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் காட்டி னால்தான் வேலை வழங்கப்படும் என ஊரக வளர்ச்சித் துறையினர் செயல்படுத்திவருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 20-ம் தேதி 24 பேருக்கும், 21-ம் தேதி 34 பேருக்கும், 22-ம் தேதி 38 பேருக்கும், 23-ம் தேதி 37 பேருக்கும், 24-ம் தேதி 39 பேருக்கும், நேற்று முன்தினம் (ஜூலை 25) 41 பேருக்கும், நேற்று 43 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் படிப்படியாக மீண்டும் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்