‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலி யாக வேலூர் ஆயுதப்படை காவலர் அடுக்குமாடி குடியிருப்பில் நிலுவையில் இருந்த கால்வாய் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
வேலூர் நேதாஜி விளையாட்டரங்கம் அருகே ஆயுதப்படை காவலர்களுக் கான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள 220-க்கும் மேற்பட்ட காவலர் குடியிருப்புகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பின் நுழைவு வாயில் பகுதியில் வேலூர் மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் கால்வாய் அமைக்கும் பணி பாதியில் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
மேலும், தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கால்வாய் பணியில் வெளியே நீட்டிக் கொண்டிருந்த இரும்பு கம்பியால் ஆபத்து இருப்பதாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 21-ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. கால்வாய் கட்டுமானப் பணி சுமார் 10 அடிக்கு மட்டுமே என்பதால் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த செய்தியின் அடிப்படையில் நிலுவைப் பணிகளை விரைந்து முடிக்கு மாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டி யன் உத்தரவிட்டார்.
அதன்பேரில், கிடப்பில் போடப்பட்டிருந்த பணியை மாநகராட்சி அதிகாரிகள் மீண்டும் தொடங்கியுள் ளனர். ஒரு வாரத்தில் இந்தப் பணி முடியும் என கூறப்பட்டுள்ளது.
இந்தப் பணியை விரைந்து முடிக்க உதவிய ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் காவலர்கள் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago