பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் : கல்வித் துறை அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சிலோ இருதயசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 2020-21-ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதில் மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்கள் விரும்பினால் பிளஸ் 2 எழுத்துத் தேர்வு எழுதலாம் என அரசு அறிவித்துள்ளது.

இம்மாணவர்கள் வரும் 27-ம்தேதி வரை காலை 10:00 மணி முதல்மாலை 5:45 மணிக்குள் செங்கல்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு தூய கொலம்பா மேல்நிலைப் பள்ளி,மதுராந்தகம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, சோழிங்கநல்லூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி, பல்லாவரம் தூய செபாஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய அரசுதேர்வுத் துறை சேவைமையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் கட்டாயம் தங்களுக்குரிய அனைத்து பாடத்தேர்வுகளையும் எழுத வேண்டும். தற்போது எழுதவுள்ள தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களே இறுதியானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்