பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 சேவை மையங்கள் அமைப்பு :

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

2020-2021 கல்வியாண்டில் மேல்நிலை 2-ம் ஆண்டு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களில் மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்களும், மே-2021 மேல்நிலை 2-ம் ஆண்டு தேர்வெழுத விண்ணப்பிக்கத் தவறிய தகுதியுள்ள தனித் தேர்வர்களும் ஆகஸ்ட் 2021 மேல்நிலை 2-ம் ஆண்டு துணைத் தேர்வுக்குகல்வி மாவட்டம் வாரியாக அமைக் கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு ஜூலை 23 முதல் 27-ம் தேதி வரை காலை 10 முதல் மாலை 5.45 மணிக்குள் நேரில் சென்று விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேற்குறிப்பட்டுள்ள தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள் சிறப்புத் திட்டத்தின் கீழ் ஜூலை 28-ம் தேதி ரூ.1,000 செலுத்தி விண்ணப்பிக்கலாம். மே-2021 மேல்நிலை பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தனித் தேர்வர்கள் தற்போது துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண் டியதில்லை.

அரசுத் தேர்வுத்துறை சேவைமையங்களின் விவரம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவுசெய்யும் தனித் தேர்வர்களுக் கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை "www.dge.tn.gov.in" என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங் களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திலும் தெரிந்து கொள்ளலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி- கள்ளக்குறிச்சி , அரசுபெண்கள் மேல்நிலைப் பள்ளி-கள்ளக்குறிச்சி, அரசு பெண்கள்மேல்நிலைப்பள்ளி- உளுந்தூர் பேட்டை, கபிலர் அரசு ஆண் கள் மேல்நிலைப்பள்ளி- திருக் கோவிலூர் ஆகிய 4 சேவை மையங்களிலும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து நேரில் சென்று விண்ணப்பிக்க அறிவுறுத் தப்பட்டுள்ளனர்.

சேவை மையங்களில் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE