ராமநாதபுரம் அரண்மனை அருகே ராசி ஸ்கேன்ஸ் மாடியில் செய்யது அம்மாள் கல்வி உதவி மற்றும் வழிகாட்டி மையத்தை செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா திறந்து வைத்தார். அறக்கட்டளை உறுப்பினர்கள், கல்விக் குழுமத்தின் முதல்வர்கள் பங்கேற்றனர்.
செய்யது அம்மாள் பொறியி யல் கல்லூரித் தாளாளர் சின்னத்துரை அப்துல்லா பேசியதாவது: 65 ஆண்டுகளுக்கும் மேலாக, ராமநாதபுரத்தில் டாக்டர் இ.எம். அப்துல்லாவால் நிறுவப்பட்ட செய்யது அம்மாள் அறக்கட்டளை கல்வி, மருத்துவம் மற்றும் இயற்கை சார்ந்த சேவைகளை ஆற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, செய்யது அம்மாள் அறக்கட்டளை இந்த ஆண்டு முதல் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஆரம்பக்கல்வி முதல் உயர் கல்விக்கு உதவித்தொகை வழங்க உள்ளது. 100 பேருக்கு இந்த உதவித்தொகை, அனைத்து சமுதாய மாணவர்களுக்கும் வழங்கப்படும்.
பள்ளிகள் மற்றும் கலை, அறிவியல், பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்பை படிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு செய்யது அம்மாள் அறக்கட்டளை யின் கீழ் இயங்கும் நிறுவனங் களில் படிக்க மட்டுமே சலுகைகள் வழங்கப்படும். மேலும், அரசு கல்லூரிகளில் மருத்துவம், பொறியியல், வேளாண்மை மற்றும் சட்டம் பயில விரும்புபவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் ராசி ஸ்கேன்ஸ் 2-வது தளத்தில் உள்ள மையத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago