காவேரிப்பட்டணம் அடுத்த பையூர் ஆத்தோரக் கொட்டாய் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வேலி அமைக்க நடப்படும் கற்கள் பாரம் ஏற்றிய லாரி சென்றது. அப்போது, அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த போலீஸார் லாரியை நிறுத்தினர். இதனால், திடீரென லாரி நின்றதால், பின்னால் வந்த டாரஸ் லாரி, நின்ற லாரி மீது மோதியது.
போலீஸார் லாரியை தடுத்து நிறுத்தியதால் தான் விபத்து ஏற்பட்டது என லாரி ஓட்டுநர் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, சரவணன் என்ற காவலரை லாரி ஓட்டுநர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஆத்தோரக் கொட்டாய் குட்டி (எ) சுப்பிரமணி(40), மலை பையூர் சிபிச் சக்கரவர்த்தி (28), காவேரிப்பட்டணம் சக்திவேல் (30), நடு பையூர் செல்வம் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், டாரஸ் லாரி ஓட்டுநர் சேகர் (45) அளித்த புகாரின்பேரில், வேலி அமைக்க நடும் கற்கள் பாரம் ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் லாரி ஓட்டுநர்கள் அப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago