கேரள மாநிலத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப் பட்டுள்ளது. இதையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கூரா சுண்டு பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஒரே நேரத்தில் 300-க்கும் அதிகமான கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் பறவைக் காய்ச்சல் காரணமாக கோழிகள் இறந்தது தெரியவந்தது.
இதனிடையே கோழிகள் இறந்த பண்ணையில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவில் அனைத்து கோழிப் பண்ணைகளையும் மூடி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்து கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் காரணமாக தமிழக கோழிப்பண்ணையாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு நாள்தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், நாள்தோறும் 1 கோடி முட்டை மற்றும் இறைச்சிக்கோழிகள் கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில் கேரள பறவைக் காய்ச்சல் காரண மாக நாமக்கல் பகுதியில் உள்ள பண்ணைகளில் நோய் தடுப்பு நட வடிக்கை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
கோழிப்பண்ணைகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுவதுடன், பண்ணைகளுக்குள் வரும் வாகனங்கள் மீது நோய் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறது.
நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகளில் உயர் பாதுகாப்பு முறைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதால், இங்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை, என கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago